Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மீண்டும் 'தடித்த வார்த்தை பேசி' சர்ச்சையில் சிக்கிய பொன்முடி! சொந்த தொகுதியில் நடந்த பரபரப்பு

    மீண்டும் ‘தடித்த வார்த்தை பேசி’ சர்ச்சையில் சிக்கிய பொன்முடி! சொந்த தொகுதியில் நடந்த பரபரப்பு

    விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களை அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

    அமைச்சர் பொன்முடியின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து, எட்டப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வருவாய்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அவ்வூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தது கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாதானப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் முயற்சித்தனர். இருப்பினும் அவர்கள் போராட்டத்த்தை தொடர்ந்தனர். 

    இதுகுறித்த தகவலறிந்த அமைச்சர் பொன்முடி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த நேற்று சென்றிருந்தார். 

    அப்போது அவரை முற்றுகையிட்ட கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேள்விகளை எழுப்பினர். அப்போது ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி சர்ச்சரிக்குறிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. பிறகு அவரை காவல்துறையினர் பாதுகாத்து அழைத்து சென்றனர். 

    சமீபத்தில் ஓசி பேருந்து என பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில், தனது சொந்த தொகுதி மக்களிடமே அதிகார திமிருடன் அவர் நடந்து கொண்டது கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: மிரட்டல் எதிரொலி: சல்மான்கானுக்கு ‘ஒய் பிளஸ்’.. அக்சய் குமாருக்கு “எக்ஸ்” பிரிவு பாதுகாப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....