Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'பேட்டி கொடுக்க கூடாது' தடுத்த காவல்துறை; எகிறிய எடப்பாடி..

    ‘பேட்டி கொடுக்க கூடாது’ தடுத்த காவல்துறை; எகிறிய எடப்பாடி..

    கைது செய்து அழைத்து செல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கும்போது, காவல்துறையினர் அவரை தடுத்ததால், அவர் ஆவேசம் அடைந்தார். 

    சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். 

    இதையடுத்து, அவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கைது செய்து அழைத்து செல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கும்போது, காவல்துறையினர் அவரை தடுத்தனர். இதன் காரணமாக ஆவேசம் அடைந்த எடப்பாடி பழனிசாமி பேட்டியினை பாதியில் நிறுத்தி எழுந்து நின்று காவல்துரையை கடிந்து பேசினார். 

    இதன்பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:

    நேற்று நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அனைத்து ஆதாரங்களோடு விளக்கமளித்தும் சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என கடிதம் கொடுத்தோம். ஆனால் 3 மாதமாக அந்த கடிதத்தை கடப்பில் போட்டுள்ளனர். 

    சபாநாயகர் நடுநிலையாக செயல்பட மறுக்கிறார். எம்எல்ஏ.,க்கள் ஆதரவு அடிப்படையில் இருக்கை ஒதுக்க வேண்டும். சட்டசபையில் அதிமுகவினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நேற்று சட்டசபை முடிந்த பிறகு ஸ்டாலினும், ஓபிஎஸ்-சும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதிமுகவை சிதைக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது.

    எம்எல்ஏக்கள் ஆதரவு தான் முக்கியம்; கட்சியை அடிப்படையாக சொல்கிறார்கள்; எம்எல்ஏக்கள் அடிப்படையில் தான் இருக்கை ஒதுக்க வேண்டும். சட்டசபை விதிகளில் இடம் இல்லை என்கிறார் சபாநாயகர். இது தவறான வாதம், சட்டத்தில் இடம் உள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கிவிட்டதாக கூறியும், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுகிறார்.

    இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்கஜெயலலிதாவிற்கு ‘ஆஞ்சியோ’ செய்யாததற்கான காரணம் இதுதானா? குற்றச்சாட்டுகளுக்கு பதில் தந்த சசிகலா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....