Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை, மற்றும் பல - பாமக நிதிநிலை அறிக்கை!

    வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை, மற்றும் பல – பாமக நிதிநிலை அறிக்கை!

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 114 அறிக்கைகள் அடங்கிய நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சட்டப்பேரவையில் வருகிற 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கை வெளிவந்துள்ளது.

    வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வரவு – செலவு, தமிழக பொருளாதாரம், வேலைவாய்ப்பு, நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. 

    pmk

    பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுபவைகள் பின்வருமாறு;

    • தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 56% குறையும்.
    • படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. 
    • பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
    • தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
    • வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்.
    • மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் முற்றிலுமாக இரத்து செய்யப்படும்.
    • புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.
    • தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.
    • பத்திரிகையாளர்களுக்கு 90% மானியத்தில் மடிக்கணினி வழங்கப்படும். அதன்படி, பத்திரிகையாளர்கள் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி மடிக்கணினி பெறலாம்.
    • காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.
    • தமிழ்நாட்டில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
    • தமிழ்நாட்டில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் அயுக்தாவிற்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.

    மேலும், மின்சாரக் கட்டண குறைப்பு, எய்ம்ஸ் கட்டுமான பணி, தமிழ்நாடு பருத்திக் கழகம் அமைப்பு, வேளாண்துறைக்கு நிதி ஒதுக்கல், எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை போன்றவைகளும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....