Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புஇப்படி சுலபமா செய்து பாருங்க சுவையான சிக்கன் கட்லெட் !

    இப்படி சுலபமா செய்து பாருங்க சுவையான சிக்கன் கட்லெட் !

    ஹோட்டலில் இருக்கும் சிக்கன் கட்லெட் போல் நாமும் சுலபமாக செய்யலாம். வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே! 

    தேவையான பொருள்கள்:

    • சிக்கன் – அரை கிலோ 
    • உருளைக்கிழங்கு – இரண்டு 
    • வெங்காயம் – இரண்டு 
    • முட்டை – இரண்டு 
    • மிளகாய்த்தூள் – இரண்டு தேக்கரண்டி  small pieces of chicken
    • கர மசாலா – ஒரு தேக்கரண்டி 
    • இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி 
    • கொத்தமல்லித்தழை – ஒரு சிறிய கைப்பிடி 
    • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 
    • மிளகுத் தூள்- அரை தேக்கரண்டி 
    • மல்லித்தூள்- அரை தேக்கரண்டி 
    • பிரெட் துகள்கள், எண்ணெய், உப்பு தேவையான அளவு   

    செய்முறை :

    • கறியை சின்ன சின்னத் துண்டுகளாக வெட்டி கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். 
    • வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கர மசாலா, இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள், மிளகுத் தூள், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். பிறகு அதனுடன், சிக்கன் கறியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 
    • 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக வெந்தவுடன், இறக்கி வைத்திட வேண்டும். பிறகு ஆறியதும் அந்த மசாலாவுடன் இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதில் சேர்க்க வேண்டும். 
    • பிறகு தேவையான அளவு உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்த வடிவில் கைகளால் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • இரண்டு முட்டைகளை உடைத்து அதில் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் பிடித்த கட்லெட்டை அதில் பிரட்டி எடுத்து பின்பு பிரட் துகள்களில் மீண்டும் பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.chicken cutlet
    • பின்பு ஒரு தவாவில் (pan) மூன்று அல்லது நான்கு மேசைக் கரண்டி எண்ணெய் விட்டு குறைந்த தீயில் 5 முதல் 8 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். 
    • அல்லது கடாயில் முழுமையாகவும் (deep fry) பொறித்து எடுத்துக் கொள்ளலாம். 
    • எண்ணெய் குறைவாக சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய வண்ணம் தவாவில் (shallow fry) குறைந்த எண்ணெய்யில் செய்யலாம்.

    அவ்வளவு தான் சுவையான சிக்கன் கட்லெட் தயார் !

    சத்து: சிக்கன் கறியில் அதிகமான புரதச் சத்து, செலினியம், நியாசின் போன்றவை இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. புரதச்சத்து பொதுவாக புதிய திசுக்களை உருவாக்கவும் அவற்றை சரி செய்யவும் பயன்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....