Wednesday, March 22, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக அரசு முன்மொழிய, அதை திமுக அரசு வழிமொழிவதெல்லாம் நியாய கணக்குதானா? - மருத்துவர்...

    அதிமுக அரசு முன்மொழிய, அதை திமுக அரசு வழிமொழிவதெல்லாம் நியாய கணக்குதானா? – மருத்துவர் இராமதாஸ் சாடல்!

    தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும், என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இந்த போரட்டம் குறித்து பதிவிட்டுள்ள பாட்டாளி மக்கள்  கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள், பள்ளிக் கல்வி இயக்குனர் வளாகத்தில் நான்காவது நாளாக அவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தக்கூட அரசு முன்வராதது ஏமாற்றமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    trb

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பணி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி ஆகும். அதை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தால் எந்தத் தேர்வும் இல்லாமல் பணி வழங்கப்படுகிறது. ஆனால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித்தேர்வு, பின் போட்டித்தேர்வு என இரு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக அரசு முன்மொழிவதும், திமுக அரசு வழிமொழிவதும் என்ன நியாயம்? எனவும் இராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளளார்.

    தமிழ்நாடு முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்களுக்கு அதிகபட்சமாக 9 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போட்டித் தேர்வு எழுதி தான் பணியில் சேர வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியைப் பெற அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும் என்று தற்போது நிகழும் அவலத்தை வெளிப்படையாக கூறினார், இராமதாஸ்.

    THe RAMADOSS

    மேலும், மருத்துவர் இராமதாஸ் அவர்கள், “மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதற்காக என்னென்ன காரணங்கள் கூறப்படுகிறதோ, அவை அனைத்தும் இந்தத் தேர்வுக்கும் பொருந்தும். அதுமட்டுமின்றி, 2018-ஆம் ஆண்டு போட்டித் தேர்வு திணிக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். அப்போது சொன்னதை செய்து முடிக்க இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது; சொன்னதை அவர் செய்ய வேண்டும்” என தான் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருந்தார்.

    பதிவின் இறுதியில், தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை போக்கும் வகையில்,  இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை, ‘குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்ற தகுதி பெற்றிருக்க வேண்டும்’ என்பதற்கிணங்க 59 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...