Friday, March 24, 2023
மேலும்
    Homeவானிலைதமிழகத்தில் இன்று கனமழை! மீனவர்கள் இங்கெல்லாம் செல்ல வேண்டாம்!

    தமிழகத்தில் இன்று கனமழை! மீனவர்கள் இங்கெல்லாம் செல்ல வேண்டாம்!

    இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    chennai vaanilai maiyamதஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மெகா மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸில் இருந்து 22 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்ட்டுள்ளது.

    today weather report

    தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, குமரிக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசும் என்பதாலும், இன்று மீனவர்கள் இங்கெல்லாம் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    weather

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் 12.45 மணிக்கு வெளியிட்டுள்ள...