Monday, March 20, 2023
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புகண்களின் கீழ் ஏற்படும் கருவளையத்தால் கவலையா? இப்படிச் செய்து பாருங்கள்!

    கண்களின் கீழ் ஏற்படும் கருவளையத்தால் கவலையா? இப்படிச் செய்து பாருங்கள்!

    நகர்ப்புற வாழ்க்கையில் பொதுவாக அனைவருக்கும் வரக் கூடிய ஒன்று தான் இந்தக் கருவளையம். உறக்கமின்மை, மன அழுத்தம், உடல் சோர்வு, அதிகம் கைப்பேசிப்  பார்ப்பது என அனைத்து விதத்தாலும் இந்தக் கருவளையம் வருகின்றது. அப்படிப் பட்ட கருவளையம் நீங்க வீட்டிலேயே சில முறைகளைக் கையாண்டால் இரண்டு, மூன்று நாட்களிலேயே வித்தியாசத்தைக் காணலாம். வாருங்கள் பார்ப்போம்.

    • தக்காளி பொதுவாக நமது தோலுக்கு புத்துணர்ச்சியையும் இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்கிறது. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidant)  இருப்பதால் கருமை நிறத்தை நீக்க வல்லது. 
    • தக்காளியுடன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் இருக்கும் பகுதிகளில் தடவ வேண்டும். வாரம் இருமுறை அல்லது மூன்று முறை செய்து வந்தால் நல்ல மாற்றங்களைக் காணலாம். 
    • அல்லது தக்காளியுடன் சிறிது சர்க்கரைச் சேர்த்தும் முகத்தில் நன்றாக தேய்த்து வரலாம். இப்படி வேண்டாம் என்றால் தக்காளி, எலுமிச்சை சாறு, புதினா மூன்றையும் சேர்த்து அரைத்துக் குடிக்கலாம். tomato and potato
    • கற்றாழை நல்ல ஈரப்பதம் மிக்கது. கருவளையம் படிந்த இடத்தில் 2 முதல் 5 நிமிடங்கள் வரை முகத்தில் நன்கு தேய்த்து கொண்டு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வந்தால் நல்ல மாற்றங்கள் தெரியும். 
    • உருளைக்கிழங்கு பொதுவாக குளிர்ந்து காணப்படும் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidant) இருப்பதால் கண்ணிற்கு கீழே உள்ள கருவளைத்தை நீக்குவதுடன், கண்ணின் வீக்கத்தையும் குறைக்க வல்லது.
    • உருளைக்கிழங்கை சாதாரணமாக சீவி அதைக் கண்களின் கீழே படிந்துள்ள  இடத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் கருவளையம்  நீங்கும்.
    • பாதம் எண்ணைய்  இரண்டு தேக்கரண்டியும் எலுமிச்சை சாறு சில சொட்டுகளும்  ஒன்றாகச் சேர்த்து கலந்து, 3 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.
    • எலுமிச்சை சாறில் அசுக்கோபிக்கமிலம் ( Ascorbic acid ) இருப்பதால் தோலைப் பொலிவுற காட்ட வல்லது. ஆனால் எலுமிச்சை சாறை நேரடியாக பயன்படுத்தக் கூடாது காரணம் அது தோலைப் பாதிக்கும். வேறு ஏதேனும் பொருளுடன் சேர்ந்து கலந்து தடவினால் நல்லது.black circled eyes
    • உடலைப் பாதுகாக்க உடற்பயிற்சியும் யோகாவும் மிகவும் முக்கியம் இது உடலை மட்டுமல்ல! நமது மனதையும் நிம்மதியாக வைத்திருக்க உதவும்.
    • நல்ல உறக்கம் அதாவது ஒரு நாளைக்கு கட்டாயம் 8 மணி நேரம் உறங்குதல் அவசியம். இதுவும் கருவளையம் வராமல் தடுக்கும்.

    அன்பான வாசகர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா? 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...