Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை விமான நிலையத்தில் புதிய முனையம்; திறக்க பிரதமர் வருகை..

    சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம்; திறக்க பிரதமர் வருகை..

    சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை வருகிற மார்ச் 27-ஆம் தேதி பிரதமர் போடி திறந்து வைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது

    இந்த புதிய முனையத்தின், கீழ் தளத்தில், பயணிகளின் உடைமைகள் கையாளப்பட உள்ளன என்றும், தரைதளத்தில் சர்வதேச வருகை பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும்,  2- ஆவது தளத்தில், பயணிகளுக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், மொத்தம், 5 தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும் பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து, 3.5 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    புதிய விமான முனையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்துவடைந்துள்ளன. பொருத்தப்பட்டுள்ள கருவிகள், உபகரணங்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பது சோதித்து பார்க்கப்பட்டு வருகின்றன. மார்ச் 27-ஆம் தேதி புதிய முனையம் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி நேரில் வந்து புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார். 

    ரஜினிகாந்தை சந்தித்த கிரிக்கெட் பிரபலம்; நெகிழ்ச்சியான பதிவு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....