Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலக அளவில் பிரபலமானவர்கள்; முதலிடம் பிடித்த மோடி!

    உலக அளவில் பிரபலமானவர்கள்; முதலிடம் பிடித்த மோடி!

    உலகிலேயே மிகவும் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். 

    அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட், உலகில் மிகவும் பிரபலமானவர்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி முதல் 32 ஆம் தேதி வரை உலகின் மிக முக்கிய 22 நாடுகளில் உள்ள தலைவர்கள் குறித்து, அந்நாட்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அதற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

    அந்த வகையில், உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். 

    இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி 78 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் முதல் இடம் பிடித்துள்ளார். மேலும் இவருக்கு எதிராக 18 சதவீதம் பேர் வாக்களித்து இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் மெக்சிகோ அதிபர் லாபெஸ் ஒபெராடோர் 68 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 62 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

    மேலும் இந்தப் பட்டியலில் 40 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ 9-வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 30 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் 13-வது இடத்தைப் பெற்றுள்ளார்.  

    சென்னையில் தயாரிக்கப்பட்ட ‘கண்’ மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் பலி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....