Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர் பூலித்தேவன்- பிரதமர் மோடி புகழாரம் 

    அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர் பூலித்தேவன்- பிரதமர் மோடி புகழாரம் 

    விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலயேர்களை எதிர்த்து 1751-ம் ஆண்டு முதன் முதலாக போரிட்ட மாமன்னர் பூலித்தேவன் ஆவார். இதன் காரணமாக, இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கருதப்படும் 1857-ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க்கலகத்திற்கு இவர் முன்னோடியாக திகழ்கிறார். இவரின் 307-வது பிறந்த நாள் விழா இன்று (செப்டம்பர் 1) வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இன்று (செப்டம்பர் 1) பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்

    இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார். 

    மேலும், நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே.. என்ற நாட்டுப்புற பாடலின் வாயிலாக பூலித்தேவன் சிறப்பை அறிய முடியும். 

    பண்டைக்கால தண்டனைகள்: ரத்தமின்றி ஒரு சித்திரவதை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....