Sunday, March 17, 2024
மேலும்
    Homeவரலாறுபண்டைக்கால தண்டனைகள்: ரத்தமின்றி ஒரு சித்திரவதை

    பண்டைக்கால தண்டனைகள்: ரத்தமின்றி ஒரு சித்திரவதை

    தண்டனைகள் என்ற சொல்லைக் கேட்டதுமே நமது சிந்தனைகள் அனைத்தும், நமது அனுமதி இல்லாமலேயே, கடந்த காலத்தை நோக்கிச் சென்று விடுகின்றன.

    தற்போதைய காலத்தை ஒப்பிடும் போது, பண்டைய காலங்களில் தண்டனைகள் மிகவும் கொடூரமாகவே இருந்துள்ளன. செய்யப்படும் குற்றங்களுக்கு ஏற்ப, கசையடியில் ஆரம்பித்து, உடல் உறுப்புகளை வெட்டுதல், யானைகளைக் கொண்டு தலையை நசுக்குதல், சிரச்சேதம் செய்தல், சித்தரவதை செய்து கொல்லுதல் என கடந்த காலங்களில், குற்றங்களுக்காக கொடுத்த தண்டனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

    இந்த தண்டனைகளை பற்றி படிக்கும் போதோ, கேள்விப்படும் போதோ, நமது உடலில் ஒரு நடுக்கம் உருவாவதை உணரமுடியும்..

    இப்படி கொடுக்கப்பட்ட கொடூரமான தண்டனைகள் பட்டியலில், ஒரு சில தண்டனைகள் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.. அம்மாதிரியான தண்டனைகளில் ஒன்று தான் ‘சிரிப்பு தண்டனை’..

    Fine laugh, tickle torcher, lauging image என அழைக்கப்படும் இந்த சிரிப்பு தண்டனை, ரத்தம் சிந்தாமல் குற்றவாளிகளை கொலை செய்ய உபயோகிக்கப்பட்டது.. இந்த தண்டனை விதிக்கப்பட்டவர்களது கை கால்கள் கட்டப்பட்டு, உணர்ச்சி மிகுந்த பகுதிகளில் விலங்குகள் மூலமாகவோ, இறகுகளைக் கொண்டோ சிரிப்பு உண்டாக்க முயற்சிக்கப் படும்..

    தண்டனைக்கு உள்ளானவர்கள் ஆரம்பத்தில், தங்களது சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்றாலும், ஒரு கட்டத்தில் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.. எனினும் அவர்களது சிரிப்பு, அவர்கள் இறக்கும் வரை நிறுத்தப்படுவது இல்லை.. அவர்களது சிரிப்பு கட்டுப்படுத்த முடியாத வலிமிகுந்த அழுகையாக மாறுகிறது.. எனினும் அவர்கள் தொடர்ந்து சிரிக்கவைக்கபட்டுக் கொண்டே இருப்பார்கள்.. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களது உயிரை இழக்கின்றனர்.

    ஒரு மனிதரின் சிரிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போனால், அவரது நுரையீரல் பகுதியில் உள்ள காற்றின் அளவு குறைந்து கொண்டே வரும், இதன் காரணமாக சுவாசிக்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்படுவார். சுவாசித்தலுக்கு தேவையான ஆக்சிஜனின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்க, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அந்த மனிதர் இறந்து விடுவார். 

    பண்டைய காலத்தில் வழங்கப்பட்ட தண்டனைகளில் பெரும்பாலானவை மிகவும் நீண்ட நாட்களுக்கு நடைபெறும் தண்டனைகளாகவே இருந்துள்ளன. இந்த சிரிப்பு தண்டனையும், மிக நீண்ட நாட்களுக்கு, அதாவது தண்டனைக்கு உள்ளாபவர்கள் இறக்கும் வரை நடத்தப்படுகிறது.. 

    Sibling abuse எனப்படும் புத்தகத்தை எழுதிய vernon wiehe என்பவர், சிறு வயதில் துன்பங்களை அனுபவித்த 150 குழந்தைகளை தேர்வு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அவர்களில் சிலர், சிரிக்கவைத்து தங்களை துன்பப்படுத்தியதாக கூறியுள்ளார்கள்.

    கட்டாயப்படுத்தி மிகுந்த நேரம் சிரிக்க வைப்பதால், வாந்தியும், கட்டுப்பாடு இழப்பும், சுயநினைவை இழத்தலும் ஏற்படுவதாக அவரது ஆராய்ச்சியில் தெரியவந்தது.

    பண்டைகால ரோம் நாட்டிலும், சீனாவிலும் பின்பற்றப்பட்டு வந்த இந்த சிரிப்பு தண்டனை, ரத்தம் தெறிக்கும் பல தண்டனைகளை விட மக்களின் மனதில் அதிக பயத்தை விளைவித்தது. தங்களது சிரிப்பே தங்களின் மரணத்துக்குக் காரணமாகும் என்பது தெரிந்தும் சிரிக்க, யாருக்கு தான் மனம் வரும்..

    இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....