Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉயர்ந்த சுங்கச்சாவடி கட்டணம்; சிரமத்தில் மக்கள்..

    உயர்ந்த சுங்கச்சாவடி கட்டணம்; சிரமத்தில் மக்கள்..

    தமிழ்நாட்டில் 28 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றுள் கிட்டத்தட்ட 600 – சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை  அவ்வபோது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி வருகிறது. 

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது வியாழக்கிழமை (செப்டம்பர் – 1) முதல் தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், ஓமலூர், கரூர் உள்ளிட்ட 28 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவின்படி, கார், வேன், ஜீப்புகளுக்கு ஐந்து ரூபாயும், டிரக், பேருந்து மற்றும் பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 15 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.5 முதல் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். 

    சாலை விபத்துகளில் சென்னை முதலிடம்; தமிழகத்துக்கு எத்தனையாவது இடம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....