Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இனி கறி சாப்பிட்டால் செக்ஸுக்கு 'நோ' சொல்லுங்க.. பெண்களுக்கு அழைப்பு விடுத்த பீட்டாவின் 'சேட்டை'

    இனி கறி சாப்பிட்டால் செக்ஸுக்கு ‘நோ’ சொல்லுங்க.. பெண்களுக்கு அழைப்பு விடுத்த பீட்டாவின் ‘சேட்டை’

    அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என பீட்டா அமைப்பு, பெண்களை செக்ஸ் ஸ்டிரைக்கிற்கு அழைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து, பீட்டா அமைப்பின் ட்விட்டரில் பதிவில்,

    அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாமிசம் சாப்பிடும் ஆண்கள் 41 சதவீதம் கூடுதல் கார்பனை வெளியிடுகின்றனர்.  

    நகர்ப்புறத்தில் வாழும் ஆண்கள் ஒரு கையில் மது பாட்டில்களுடன் அசைவ உணவை உண்கின்றனர். அசைவ உணவுகளை உண்பதை ஆண்கள் பெருமையாக நினைக்கின்றனர். அதை மற்றவர்களிடம் பெருமையாகவும் கூறுகின்றனர். 

    அசைவ உணவு சாப்பிடுவதால் விலங்குகளை அழிப்பது மற்றும் துன்புறுத்துவது இல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் கேடாகிறது.

    தற்போது பருவநிலை மாற்ற பிரச்சனைகள் அதிகரித்து வருவதற்கு ஆண்கள் தான் முக்கிய காரணம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், அசைவ உணவு சாப்பிடும் ஆண்களுடன் பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம். 

    இந்த பிரச்சனைக்கு தீர்வாக மிகவும் எளிதான, சத்தான வழி என்பது சைவ உணவுக்கு மாறுவது தான். தங்களது பிள்ளைகள் ஆரோக்கியமான பூமியில் வாழ விரும்பும் அப்பாக்கள் தான் அசைவ உணவை விரும்பி சாப்பிட்டுக் கொண்டு தவறு செய்கின்றனர். அவர்கள் உடனடியாக தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு, பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. 

    செக்ஸ் ஸ்டரைக் (Sex Strike) என்றால் என்ன?

    மக்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்திருப்போம். அதுபோல், பெண்கள் அனைவரும் இணைந்து ஆண்களுடன் பாலுறவு கொள்வதை நிறுத்துவது தான் செக்ஸ் ஸ்டிரைக் (Sex Strike) எனப்படுகிறது

    இதையும் படிங்க: திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....