Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது?- சரியான பதிலை கண்டுபிடிக்க விசாரணைக் குழு

    தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது?- சரியான பதிலை கண்டுபிடிக்க விசாரணைக் குழு

    சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட சாதி ரீதியான கேள்வி குறித்து விசாரிக்க, உயர்மட்ட விசாரணைக்கு குழு அமைத்து, தமிழக உயர்கல்வித்துறை நேற்று (ஜூலை 19) உத்தரவிட்டது.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட சாதி ரீதியான கேள்வி குறித்து விசாரிக்க, உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து தமிழக உயர்கல்வித்துறை நேற்று (ஜூலை 19) உத்தரவிட்டது.

    இந்த உயர்மட்ட விசாரணைக்குழு, ஒரு மாதத்துக்குள் அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

    உயர் கல்வித்துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றிதாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில், உயர்கல்வித்துறை துணை செயலாளர் தனசேகர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயலக்ஷ்மி ஆகியோர் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வியும், அதற்கு மஹார், நாடார், ஈழவர், ஹரிஜன் என்ற நான்கு விருப்பங்களும் கொடுக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து இந்த கேள்வி குறித்து விளக்கம் அளித்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது அல்ல, பிற பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தயாரிக்கப்பட்டது என்று கூறினார்.

    மேலும், வினாத்தாள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக அதை முன்கூட்டியே படித்துப் பார்க்கும் நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் கிடையாது. சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு மறு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

    இதுபோன்று பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அலட்சியமான நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் மீதும் அதற்கு பரிந்துரை செய்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், செமஸ்டர் தேர்வில் சாதி குறித்து கேள்வி இடம்பெற்றது பற்றி விசாரிக்க, தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 16) விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    கள்ளக்குறிச்சி வன்முறைக்கு சமூக வலைதளம் காரணமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....