Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉள்ளாடையைக் கழற்ற வற்புறுத்திய தேர்வு- தேர்வு கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு

    உள்ளாடையைக் கழற்ற வற்புறுத்திய தேர்வு- தேர்வு கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு

    கேரளாவில் நீட் தேர்வின் போது, தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடையைக் கழற்ற வற்புறுத்திய தேர்வு கண்காணிப்பாளகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளாவின் கொல்லத்தில் உள்ள தனியார் கல்வி மையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 17) நீட் தேர்வு நடைபெற்றது. இங்கு தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றிய பிறகு தேர்வு எழுத அனுமதித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனை அடுத்து கேரள காவல் துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அந்த சோதனையை சந்தித்தாக கூறி 17 வயதுடைய சிறுமி ஒருவர் கொடுத்திருந்த புகாரின் பெயரில் கேரள காவல்துறையினர் இந்த வழக்கை பதிவு செய்தனர்.

    இது குறித்து பதில் அளித்த தனியார் கல்வி நிறுவனம், தங்களது நிறுவனத்தின் ஊழியர்கள் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், சோதனை செய்வதற்கும், வருகைப் பதிவை கவனித்துக் கொள்வதற்கும் தேசிய தேர்வு மையம் இரண்டு நிறுவனத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்களை நியமித்திருந்தது. தேர்வு எழுத வந்த சிறுமிகள் தங்களுக்கு ஒரு சால்வை வேண்டும் என அழுதுகொண்டே கேட்ட போது, நாங்கள் அவர்களுக்கு சால்வையைக் கொடுத்தோம் எனக் கூறியுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 (பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல்) மற்றும் 509 (ஒரு பெண்ணை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள காவல் துறையினர் தெரிவித்தனர்.

    கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் திங்கள்கிழமை (ஜூலை 18) அளித்த பேட்டியில், ‘மாநில கல்வி அமைப்பு இந்த தேர்வை நடத்தவில்லை. இந்த நிகழ்வு குறித்து, தேர்வு நடத்தும் தேசிய தேர்வு மையத்துக்கு தெரிவிக்கவுள்ளோம்.’ எனக் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து பதில் அளித்த தேசிய கல்வி மையத்தின் அலுவலர்கள், இந்த மாதிரியான வழக்குகள் இதுவரை வந்ததில்லை என தெரிவித்துள்ளனர். 

    தேசிய தேர்வு மையத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது: ‘இது குறித்து எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. சமூக ஊடகத்தில் பரவிய செய்திகளை வைத்து, தேர்வு மையத்தின் கண்காணிப்பாளரிடம் அறிக்கை பெறப்பட்டது.’

    ‘இது மாதிரியான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை, தவறான நோக்கத்தின் அடிப்படையில் இந்த புகார் எழுப்பப்பட்டுள்ளதாக தேர்வு கண்காணிப்பாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.’ என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், நீட் தேர்வில் இது போன்ற உடை நெறிமுறை பின்பற்றப்படுவதில்லை, அமைதியான முறையில் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்யும் முறையிலேயே உடை நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

    தேர்வுக்கு எழுத வரும் மாணவர்களின் உடை நெறிமுறை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாணவர்கள் சாதாரண உடைகளில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுக்கை உடைகளையும், பிரகாசமான வண்ண உடைகள் அணிவதையும் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காலணிகளைப் பொறுத்தவரை, செருப்புகளை மட்டுமே அணிய அனுமதி அளிக்கப்படுகிறது. ஷூக்கள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் நீட் தேர்வு மையங்களில் உள்ளாடையை நீக்கச்சொன்னதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோன்று, கடந்த 2018ம் ஆண்டு பாலக்காடு மாவட்டத்தில் 18 வயது பெண்ணுக்கு இது போன்றதொரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....