Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதுர்கா பூஜையின்போது ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட மக்கள்; அதிர்ச்சி வீடியோ

    துர்கா பூஜையின்போது ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட மக்கள்; அதிர்ச்சி வீடியோ

    மேற்கு வங்க மாநிலத்தில் தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக நடைபெற்ற துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது மால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 

    மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற தசரா விழாவில் துர்கா சிலை கரைக்கும் போது பெரும் விபத்து  ஏற்பட்டது. 

    துர்கா சிலைகளை நீரில் கரைக்கும்போது மால் ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. 

    இதையும் படிங்க:பாலிவுட்டுடன் கோலிவுட், டோலிவுட் இணைந்தால் 4,000 கோடி வசூலாகும் – புதிய ரூட்டில் சல்மான்கான்

    இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் பலர் அடித்து செல்லப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்த மக்கள் காப்பாத்துமாறு கூச்சலிட்டனர். உடனே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டாலும், பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுவரை சுமார் 7  பேர் உயிரிழந்ததாக தவகல்கள் வெளியாகியுள்ளன. பின்பு சிலை கரைக்க வந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

    தசரா விழாவில் சிலை கறுப்பு சடங்கின்போது ஏற்பட்ட திடீர் வெள்ளமும், அதில் சிக்கிய மக்கள் உயிரிழந்த சம்பவமும் தொடர்பான காணொளி வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....