Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசு அதிரடி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு..!

    தமிழக அரசு அதிரடி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு..!

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கோரிக்கையை ஏற்று, சிறு அவர்களுக்கான மின் கட்டணம் 10% சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி அமலுக்கு வந்தது.இந்த உயர்வை பல்வேறு தரப்பினரும் எதிர்த்த நிலையில்,இந்த கட்டண உயர்வால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்று ,அந்நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தமிழக அரசு தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை 10 சதவீதம் குறைத்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

    2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை, நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு ,நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension III-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்கதனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை; அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து.!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....