Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜெயில் சாப்பாடு - '5 ஸ்டார்' தரத்தில் அசத்தும் இந்திய சிறை!

    ஜெயில் சாப்பாடு – ‘5 ஸ்டார்’ தரத்தில் அசத்தும் இந்திய சிறை!

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் பருக்காபாத் சிறைக்கு 5 நட்சத்திர அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. 

    குற்றங்கள் செய்வதவர்களிடம் என்ன களி திண்ண போகிறாயா? என்று கேட்பார்கள். அப்படி என்றால், சிறைக்கு போகப் போகிறாயா என்ற உள் அர்த்தத்தை வைத்து கேட்பார்கள். பொதுவாக அந்த காலத்தில் களி வழங்கப்பட்டதால், அப்படி கூறுவது உண்டு. ஆனால், இப்போது ஒரு சிறைச்சாலையில் வித விதமாக தரமான உணவு வழங்கப்படுவதால், 5 நட்சத்திர (5 Star) அந்தஸ்த்து வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

    உத்தரப் பிரதேச மாநிலம் படேகர் மாவட்டத்தில் உள்ள பருக்காபாத் என்ற சிறைச் சாலைக்கு இந்த 5 நட்சத்திர (5 Star) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தப் பருக்காபாத் சிறைச்சாலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பாதுகாப்புடனும், தரத்தன்மையுடனும் உணவு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வகை வகையான உணவுகளும், அப்படி வழங்கப்படும் உணவு பக்குவத்துடனும் தரப்படுகிறது என கூறப்படுகிறது. அதேபோல், உணவு வழங்குபவர்களும் தூய்மையாக வேலை செய்து வருவதாகவும், அவர்களை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

    இந்தச் சிறைச்சாலையில், உயர்தரத்தில் உணவு சமைத்து வழங்கப்படுவதால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அங்கு ஆய்வு நடத்தி இந்த 5 நட்சத்திர சான்றிதழை அளித்துள்ளது. 

    இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை வழங்குவதற்கு முன் சில சிறைச்சாலை ஊழியர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு தர அதிகாரிகள் உணவு பொருட்கள் வாங்கும் இடம் மற்றும் உணவின் தரம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர். 

    சிறையில் வாரத்தின் 7 நாட்களும் கைதிகளுக்கு விதவிதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. பருப்பு வகைகள் மற்றும் கொண்டைக்கடலை உணவுகள் கைதிகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி
    கொண்டைக்கடலை மற்றும் பாவ் ரொட்டி உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு காலை உணவாக வழங்கப்படுகிறது. 

    மூன்று நாட்களுக்கு கோதுமை கஞ்சி தரப்படுகிறது. பல்வேறு வகையான பருப்பு வகைகளால் செய்யப்பட்டவை மதிய உணவாக வழங்கப்படுகிறது. பூரி, சப்ஜி மற்றும் அல்வா ஆகியவை மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலையில் பரிமாறப்படுகின்றன. 

    இந்த உணவு வகை தயாரிப்பில் 30 முதல் 35 கைதிகள் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் உணவின் தரமும் சரிபார்க்கப்படுகிறது. 

    இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....