Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கம்

    மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கம்

    ஆசிரியர் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்க மாநிலத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த ஜூலை 23-ம் தேதி அவரை கைது செய்தனர். 

    இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் உள்ள பார்த்தா சட்டர்ஜியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குனல் கோஷ் தெரிவித்திருந்தார். 

    இதைத்தொடர்ந்து, மேற்கு வங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. 

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, பொது நிறுவங்கள் மற்றும் தொழில்துறை புனரமைப்பு ஆகிய துறைகளிலிருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பார்த்தா சட்டர்ஜியை நீக்கி என்னுடைய கட்சி தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை’ என தெரிவித்துள்ளார்.

    கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது- உச்சநீதிமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....