Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமூத்த குடிமக்களுக்கு பயணங்களில் கட்டணச் சலுகை; பரசீலிக்குமா மத்திய அரசு?

    மூத்த குடிமக்களுக்கு பயணங்களில் கட்டணச் சலுகை; பரசீலிக்குமா மத்திய அரசு?

    மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணங்களில் கட்டணச் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துறைச் செய்துள்ளது. 

    ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுக்கைகளுடன் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

    இதைச் சார்ந்து, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கொரோனா பரவலுக்குப் பிறகு, ரயில் பயணங்களில் பயணிகளுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறையும் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், தற்போது ரயில்வே இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. எனவே, வெவ்வேறு வகை ரயில் பயணிகளுக்கு நியாயமான முறையில் மீண்டும் கட்டணச் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்.

    மேலும், மூத்த குடிமக்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுக்கைகளுடன் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணங்களுக்காவது உடனடியாக கட்டணச் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறாக, அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....