Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபல்லுயிர்களையும் பாதுகாக்க... காவிரி கரையில் தமிழகத்தின் 17வது வன விலங்கு சரணாலயம்! - ஒரு சின்ன...

    பல்லுயிர்களையும் பாதுகாக்க… காவிரி கரையில் தமிழகத்தின் 17வது வன விலங்கு சரணாலயம்! – ஒரு சின்ன பார்வை

    தமிழக அரசு கடந்த 8-ம் தேதி கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள 686.405 சதுர கி.மீ பரப்பிலான காப்புக் காடுகளை காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமாக அறிவித்தது.  இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த சரணாலய பகுதி குறித்து வனத்துறை தெரவித்துள்ளதை இக்கட்டுரையில் காண்போம். 

    காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமானது, தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரியதொரு பாதுகாப்புப் பகுதியாக அமைகிறது. இப்பகுதி சூழலியல் பாதுகாப்பு மற்றும் தாவர இனங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியப் பகுதியாக உள்ளது. இப்பகுதியானது தென்னிந்தியாவில் யானைகள் வாழ்விடங்களில் முக்கியமானதாகவும் காவிரி ஆற்றுப்படுகையில் வன உயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் அமைகிறது.

    இந்த சரணாலயப் பகுதி நீலகிரி உயிர்கோளக் காப்பகப் பகுதி வரை, தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன உயிரின வாழ்விடத்தை ஏற்படுத்துகிறது. இந்த சரணாலயத்தின் தொடர்ச்சியாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், காவிரி வன உயிரின சரணாலயம், மலைமாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கணக்கெடுப்புகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    இதையும் படிங்கநடைபெற்ற ஆதிதிராவிடர் ஆய்வுக்கூட்டம்; பயன்கள் மக்களை அடையுமா?

    இப்பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்ச்சியாக உள்ளதால், இப்பகுதியில் மீண்டும் புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுக்க ஏதுவாக அமையும். மேலும், சிறுத்தைகள் மற்றும் அழியும் நிலையில் உள்ள மாமிச உண்ணிகளின் வாழ்விடத்தை மேம்படுத்தவும் ஏதுவாக அமையும். அறிவிக்கை செய்யப்பட்ட இச்சரணாலயம் இரு முக்கிய யானைகள் வழித்தடமான நந்திமங்கலம் – உழிபண்டா மற்றும் கோவைபள்ளம் – ஆனபெத்தள்ளா ஆகிய இடங்களைக் கொண்டுள்ளது.

    மேலும், வனத்துறை தெரிவிக்கையில், இப்புதிய சரணாலயம் 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள் மற்றும் 103-க்கும் மேற்பட்ட மர வகைகளைக் கொண்ட உயிர்பன்மைமிக்க பகுதியாக காணப்படுகிறது என்றும், காவிரி ஆற்றுப்படுகையான இங்கு டெக்கான் மஹனீர் மீன்கள், ஹம்ப்பேக்டு மஹனீர் மீன்கள், மெல்லிய ஓடுடைய ஆமைகள், மலை அணில்கள், நீர் நாய்கள், முதலைகள், நாற்கொம்பு மான்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன என்றும் தெரிவித்தது. 

    இதோடு, இப்பகுதி 50 கி.மீ தொலைவிற்கு காவிரி ஆற்றுப்படுகையில் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டு, மேட்டூர் அணை வரை தாழ்வான காப்புக் காடுகளை உள்ளடக்கியது.

    இதையும் படிங்கதமிழக அரசு அதிரடி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....