Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாராம்சர் சதுப்புநில பட்டியலில் பள்ளிக்கரணையும், பிச்சாவரமும் இணைப்பு

    ராம்சர் சதுப்புநில பட்டியலில் பள்ளிக்கரணையும், பிச்சாவரமும் இணைப்பு

    ராம்சர் சதுப்புநில பட்டியலில் பள்ளிக்கரணை, பிச்சாவரம் உள்ளிட்ட 5 சதுப்புநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டில் உள்ள கரீபியன் கடற்பகுதியில் உள்ள ராம்சர் எனும் நகரில் 1971-ம் ஆண்டு ராம்சர் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்  சதுப்புநிலங்களை பராமரிப்பது ஆகும். ஆதலால், ராம்சர் பட்டியலில் இணையும் பகுதிகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    இந்த ராம்சர் பட்டியிலில் தற்போது இந்தியவை சேர்ந்த 5  பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் சதுப்புநிலம், கரிக்கிளி பறவைகள் சரணாலயம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

    மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள சாக்யா சாகர், மிசோரமில் உள்ள பாலா சதுப்பு நிலம் ஆகியவையும் ராம்சர் சதுப்புநில பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்தியாவில் உள்ள ராம்சர் சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் தொடரும் கொலை- மக்களை காக்குமா மத்திய அரசு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....