Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தானில் வெள்ளம்- பலி எண்ணிக்கை உயர்வு

    பாகிஸ்தானில் வெள்ளம்- பலி எண்ணிக்கை உயர்வு

    பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து பருவமழை பெய்து வருகிறது. இந்தப் பருவமழையின் காரணமாக நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. 

    மேலும், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பலுசிஸ்தான் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரையில், பலுசிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 127 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால்  கராச்சி மற்றும் சிந்து மாகாணங்களில் 70 பேரும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 60 பேரும், பஞ்சாபில் 50 பேரும்  உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தேசிய மற்றும் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. மேலும், இதுவரையில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் சிக்கி 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.  மேலும் ரூ.10 லட்சம்  இழப்பீட்டுத் தொகை உள்பட அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

    மேலும், வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    செங்கடலுக்கு அடியில் உயிர் பலியாகும் அதிசய பகுதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....