Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை' என்பதை மு.க.ஸ்டாலினை தெளிவுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்!

    ‘பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்பதை மு.க.ஸ்டாலினை தெளிவுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்!

    மேகதாது குறித்து கர்நாடகம்

    கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் மேகதாது உள்ளிட்ட நீர்ப் பகிர்வு திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் , கூட்டப்படும் என்றும், இது குறித்து கர்நாடக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும், இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்ளப் போவதாகவும், இதனை செயல்படுத்துவதற்கான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்வோம் என்றும் கூறியிருப்பது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த மாண்புமிகு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றும், இப்பிரச்சனையை கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் கூறி இருந்தார். 

    பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கை 

    இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான பன்னீர் செல்வம் அவர்கள், மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று தேசிய கட்சிகள் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூறி வருகின்ற சமயத்தில், தமிழ்நாட்டில் உள்ள தேசிய கட்சிகள் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வகையில் கருத்து தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    ops

    மேலும், கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயல் என்றும், மேகதாது அணை கட்டப்பட்டால், காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீரும் நின்றுவிடும் சூழ்நிலை ஏற்படும் என்பதையும், காவேரி நீரை நம்பி விவசாயம் செய்யும் வேளாண் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் என்பதையும், இன்னும் சொல்லப்போனால், வேளாண் தொழிலே முடங்கும் சூழ்நிலை உருவாகும் என்பதையும் அவர் தனது அறிக்கையின் மூலம் நினைவுக்கூர்ந்தார்.

    பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை 

    ‘எந்தச் சூழ்நிலையிலும் மேகதாது அணை கட்டப்படுவது கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதும், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதும்தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது’ என்று கூறினார் பன்னீர் செல்வம். 

    mk stalin

    தனது அறிக்கையின் இறுதியாக ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும், மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக தெளிவுபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பன்னீர் செல்வம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....