Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇரயில் எஞ்சினுக்கு அடியில் அமர்ந்து 190 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்!

    இரயில் எஞ்சினுக்கு அடியில் அமர்ந்து 190 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்!

    பீகாரில் உள்ள சாரநாத் புத்த பூர்ணிமா விரைவு ரயிலின் எஞ்சினுக்கு அடியில் 190 கிலோ மீட்டர் தூரம் பயணித்த இளைஞர் ஒருவர் கயா ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அவரை விசாரிக்கும் முன்பே தப்பி ஓடி விட்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அவர் எங்கிருந்து ரயிலில் ஏறினார் என்பதை ரயில்வே அதிகாரிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இரயில் பணிமனையில் இருந்த போது ஏறியிருக்கலாம் என இரயில்வே அதிகாரிகளால் அணுமானிக்கப்படுகிறது.

    ஏனெனில் இந்த இரயிலானது ராஜ்கிரில் தொடங்கி கயா வரை 6 நிறுத்தங்களை மட்டுமே கொண்டுள்ளது. அந்நிறுத்தங்களிலும் 2 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே நிற்கும். பாட்னா இரயில் நிலையத்தில் மட்டுமே 10 நிமிடம் நின்றிருக்கும். மேலும் இரயிலின் எஞ்சின் இயக்கத்தில் இருக்கும் பொழுது அது வெளியிடும் வெப்பத்தின் காரணமாக யாரும் அதனடியில் செல்ல இயலாது என்பது இரயில்வே அதிகாரிகளின் கூற்றாக உள்ளது.

    இரயிலின் ஓட்டுநர் இந்நிகழ்வு பற்றி கூறுகையில்…

    திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரயில் கயா இரயில் நிலையத்தை அடைந்தபோது என்ஜினின் கீழே மனிதனின் அலறல் சத்தம் கேட்டு, டார்ச் அடித்து என்ஜினுக்கு அடியில் பார்த்த பொழுது, இழுவை மோட்டாருக்கு அடியில் ஒருவரைக் கண்டதாக கூறியுள்ளார். உடனே ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அந்த இளைஞனை பத்திரமாக மீட்டுள்ளனர். அந்த இளைஞன் மனநிலை சரியில்லாதவன் போல் காட்சியளித்ததாகவும், இன்ஜினில் இருந்து உருவாகும் கடும் வெப்பத்தால் உடல் நிலை மோசமடைந்து காணப்பட்டதாகவும், அவரை ரயில்வே காவல்துறையினர் வெளியே அழைத்துச் செல்லும் பொழுது குடிக்க தண்ணீர் கேட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ரயில்வே அதிகாரிகள் அந்த இளைஞனிடம் இருந்து எவ்வித அடையாளத்தையும் கண்டுபிடிக்க தவறியதால், அவர் மீட்கப்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

    இனி ஆதார் வீட்டுக்கே வரும்; அடையாள ஆணையத்தின் புதிய யோசனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....