Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'சமோசாவுக்கு ஸ்பூன் தரல' முதல்வர் அலுவலகம் வரை சென்ற புகாரால் பரபரப்பு!

    ‘சமோசாவுக்கு ஸ்பூன் தரல’ முதல்வர் அலுவலகம் வரை சென்ற புகாரால் பரபரப்பு!

    சமோசாவுக்கு ஸ்பூனும் தட்டும் தரவில்லை என முதல்வரின் உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கப்பட்டிருப்பது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    வட இந்தியாவில் பொதுவாக காலை உணவாக கச்சோரி, சமோசா போன்ற உணவு வகைகளை விரும்பி உண்ணுவார்கள். அப்படி ஒரு நபர் உணவு பார்சல் வாங்குகையில் ஒரு சமோசா கடையில் ஸ்பூனும் தட்டும் கொடுக்காத காரணத்தினால், முதல்வருடைய உதவி எண்ணுக்கே தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். 

    மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் பேருந்து நிலையத்தில் ராகேஷ் சமோசா என்ற கடை உள்ளது. இந்தக் கடைக்கு வன்ஷ் பகதூர் என்ற நபர் சென்றுள்ளார். அப்போது அவருக்கு சமோசா பார்சலில், ஸ்பூனும் தட்டும் வைக்கவில்லை. உடனே ஆத்திரமடைந்த அவர், அம்மாநில முதல்வர் உதவி எண்ணை தொடர்புகொண்டு, ‘சதர்பூர் பேருந்து நிலையத்தில் ராகேஷ் சமோசா என்ற பெயரில் ஒரு கடை உள்ளது. இந்தக் கடையில் காலை உணவு வாங்கினேன். நான் வாங்கிய சமோசாவுக்கு ஸ்பூன் மற்றும் தட்டுக்கள் தரவில்லை. சமோசாவை பேக்கிங் செய்து தருபவர்களும் சுத்தமாக இல்லை. அதனால், இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். 

    இந்தப் புகாரை ஏற்ற முதல்வரின் உதவி எண் குழுவினர், பின்பு அந்தச் சமோசா கடைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    சமோசாவுக்குக்காக முதல்வர் உதவி எண்ணை அழைத்து புகார் அளித்திருப்பது என்னதான் வேடிக்கையாக இருந்தாலும், சேவைக் குறைபாடு இருப்பின் புகார் அளிக்கலாம் என்பதை இந்தச் சம்பவம் உறுதி செய்துள்ளது.

    இந்த சமோசா சம்பவத்தை வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....