Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமணப்பாறை முறுக்கையும் விட்டு வைக்காத விலை விலைவாசி உயர்வு!

    மணப்பாறை முறுக்கையும் விட்டு வைக்காத விலை விலைவாசி உயர்வு!

    மணப்பாறை முறுக்கிற்கு இந்தியாவில் அறிமுகம் தேவையில்லை, தமிழ்நாட்டின் திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணப்பாறை-யை மையமாக வைத்து உருவான இந்த முறுக்கு தமிழ்நாட்டின் 24 தனித்துவமான தயாரிப்புகளின் பட்டியலில் உள்ளது.

    தீபாவளிப் பலகாரப் பட்டியலில் முறுக்குக்குத் தவிர்க்க முடியாத இடம் உண்டு. வீடுகளில் முறுக்குச் சுற்றிய காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி, கடை முறுக்குகளில் கண் பதிக்கத் தொடங்கிய மக்களின் மனங்களை ஆக்கிரமித்துவிட்டது ‘மணப்பாறை முறுக்கு.’

    அரிசி முறுக்கு, நெய் முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கேழ்வரகு முறுக்கு, சாமை முறுக்கு, வரகு முறுக்கு, சிறுதானிய முறுக்கு, ஓம முறுக்கு, கடலை மாவு முறுக்கு, பூண்டு முறுக்கு என மணப்பாறையில் அணிவகுக்கும் வகை வகையான முறுக்குகள் வாயூறவைக்கின்றன. மொறு மொறுவென இதமாக நாவில் கரையும் பதமும், சுண்டியிழுக்கும் ருசியும் மணப்பாறை முறுக்கின் விசேஷம்.

    நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் மணப்பாறை முறுக்கு உற்பத்தி என்பது பெரிய நிறுவனங்களைக் காட்டிலும், MSME மற்றும் குடிசை தொழில்கள் தான் அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. இந்த முறுக்கு தயாரிக்கும் தொழிலில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் ஈடுபட்டு உள்ளன.

    இந்நிலையில், இந்தியாவில் தற்போது உருவாகியுள்ள உற்பத்தி பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவை மணப்பாறை முறுக்கு உற்பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மணப்பாறை முறுக்கின் முக்கியமான USP என்றால் அதன் குறைவான விலையும், 30 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும் நிலை தான்.

    இப்படியிருக்கும் நிலையில் மணப்பாறை முறுக்குத் தயாரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் பாமாயில் விநியோகத்தில் இந்தோனேஷியாவின் ஏற்றுமதி தடைக்குப் பின்பு இதன் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்து இப்பிரிவில் இருக்கும் மக்களை அதிகளவில் பாதித்தது. 900 ரூபாயாக இருந்த 15 லிட்டர் பாமாயில் தற்போது 2300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பொதுவாக மணப்பாறை முறுக்குத் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் கடன் அடிப்படையில் பாமாயில் வாங்குவார்கள், ஆனால் தொடர் விலையேற்றத்தின் காரணமாகப் பணத்தைக் கொடுத்த பின்பு எண்ணெய் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் மணப்பாறை முறுக்கு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும், இதன் மூலம் ஏற்படும் வர்த்தகப் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் இப்பிரிவு நிறுவனங்கள்.

    இந்த விலைவாசி உயர்வையும், பணப் புழக்க பாதிப்புகளையும் தாக்குப்பிடிக்க முடியாத சிறு குறு தொழில்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட வேளையில் பாமாயில் ஏற்றுமதி தடைகள் நீக்கப்பட்டு வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பத் துவங்கியுள்ளது. ஆனாலும், எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதே உண்மை.

    ‘உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல்’ – சீமான் காட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....