Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒடிசாவில் மட்டுமே இவ்வளவு யானைகள் பலியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

    ஒடிசாவில் மட்டுமே இவ்வளவு யானைகள் பலியா? – அதிர்ச்சி ரிப்போர்ட்!

    ஒடிசாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 245 யானைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எம்எல்ஏ சவும்யா ரஞ்சன் பட்நாயக் யானைகள் உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு வனத்துறை அமைச்சர் பிரதீப் அமத் பதில் அளித்துள்ளார்.

    அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் ஒடிசா மாநிலத்தில் மட்டும் 245 யானைகள் உயிரிழந்துள்ளது. இதில் 6 யானைகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளன.

    அதேநேரம், கடந்த மூன்று ஆண்டுகளில் 43 வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 39 தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கைகள் அங்குல், பாலசூர், மயூர்பஞ்ச், கட்டாக், தியோகர், கலஹந்தி, கியோன்கர் மற்றும் சுபர்நபூர் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளதாக ஓடிசா மாநில வனவிலங்குத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில் ஒடிசாவில் வனவிலங்குகள் பாதுகாப்பு முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை தொடர்ச்சியாக ஒடிசா அரசு மறுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் இவ்வளவு வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கமா? – வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....