Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதேசிய பங்குச்சந்தை அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் வழக்கு

    தேசிய பங்குச்சந்தை அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் வழக்கு

    தேசிய பங்குச்சந்தை எனப்படும் என்.எஸ்.இ. அதிகாரிகளின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டதாக மூவர் மீது மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) வழக்குப்பதிவு செய்துள்ளது. 

    பங்குச் சந்தை ஊழல் வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் குழும அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், என்.எஸ்.இ. அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக சித்ரா ராமகிருஷ்ணன், மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் சஞ்சய் பாண்டே மற்றும் என்.எஸ்.இ. முன்னாள் தலைமை அதிகாரி ரவி நரேன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    வழக்குப்பதிவை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில்  மத்திய புலனாய்வுத்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது. 

    தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டது தொடர்பான இந்தச் சோதனை மும்பை, புனே உள்பட 10 இடங்களில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    ஐனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு – தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....