Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇனிமேல் இந்த தங்க நகைகள் எல்லாம் விற்பனைக்கு கிடையாது...

    இனிமேல் இந்த தங்க நகைகள் எல்லாம் விற்பனைக்கு கிடையாது…

    இந்தியாவில் மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்படாத தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    உலக அளவில் பொருளாதரத்தை தீர்மானிக்கும் அளவிற்கு தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் நாட்டை பொறுத்தவரையிலும் தங்கம் வாங்குவதென்பது மிக முக்கியமாக பார்க்க்ப்படுகிறது. அப்படி தங்கம் வாங்குகையில் தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, ஹால்மார்க் முத்திரை அளிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. 

    ஹால்மார்க் முத்திரை பெற, தனித்துவமிக்க ஆறு இலக்க எண் ஒன்று ஒவ்வொரு நகை மீதும் பொறிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த நகையை உருவாக்கிய நிறுவனம் மற்றும் ஹார்ல்மார்க் முத்திரை அளித்த மையம் எது என்பதை எளிதாக கண்டறிய முடியும். இந்நிலையில், மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்படாத தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    மேலும், நாடு முழுவதும் ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன. சிறு, குறு நகை நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதற்காகும் கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுவதன் மூலம், தங்க நகை வாங்குபவர்கள் ஏமற்றப்படுவது தடுக்கப்பட்டு, நாடு முழுவதும் தங்க நகைகளின் தரத்தை ஒரே அளவில் இருக்கச் செய்ய முடியும் என கூறப்படுகிறது. 

    வெளிவந்தது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் அப்டேட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....