Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமகளிர் தினம் முன்னெடுப்பு; 'ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு' என அறிவிப்பு

    மகளிர் தினம் முன்னெடுப்பு; ‘ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு’ என அறிவிப்பு

    கேரளாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் கால மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பெண்களை முக்கியத்துவம் படுத்தும் விதத்தில் உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு கேரள மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக கேரள பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. 

    இந்த ஆலோசனையில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி இனி மாணவிகள் பருவத்தேர்வு எழுத 73 சதவீத வருகை பதிவு இருந்தால் போதுமானது என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

    அதேபோல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாத காலம் அளிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு முடிந்து கல்லூரியில் சேரும்போது மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதனை கல்லூரி முதல்வர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி; தருமபுரியில் கொடூரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....