Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇறையன்பு திடீர் விசிட்! மழைநீர் வடிகால் பணிகள் சரி வர முடியாததால் அதிகாரிகள் மீது கோவம்

    இறையன்பு திடீர் விசிட்! மழைநீர் வடிகால் பணிகள் சரி வர முடியாததால் அதிகாரிகள் மீது கோவம்

    மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாததால் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளைச் சற்று கடிந்தார். 

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1000 கிலோ மீட்டருக்கு மேலாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறையின் சார்பில் நடைபெற்று வரும் இந்த பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (அக்டோபர் 2) காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். 

    முதலில் திருவான்மியூரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்தார். அதன் பின்பு, பள்ளிக்கரணை பகுதியில் கால்வாய் ,இணைப்புக் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சீர்படுத்துவது, மதகுகளை ஒழுங்குபடுத்துவது, ஆகாயத்தாமரை அகற்றுவது போன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார். 

    திருவான்மியூரில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்த போது, ஆகாயத்தாமரையை கூட இன்னும் அகற்றாமல், தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் இருந்ததை பார்த்தார்.

    அப்போது, ‘நாம் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யவில்லை என்றால் நிச்சயமாக நம்மால் பருவமழையை எதிர்கொள்ள முடியாது. எனக்கு தெரியாதா? உங்கள் துறையை பற்றி… நீங்கள் மனது வைக்கவில்லை. நீங்கள் மனது வைத்திருந்தால், இந்தப் பணி எப்போதோ முடிந்திருக்கும். இது ஒரே நாளில் பந்தல் போடும் துறையல்ல, வேலையும் அல்ல’ எனத் தெரிவித்தார். 

    மேலும், வருகிற 7 ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார். 

    மொத்தம் 11 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: கணவன் கண்முன்னே மனைவியிடம் சில்மிஷம் செய்த நபர் போலீஸா? வைரல் விடியோவால் பரபரப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....