Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்'இனிமேல் இந்த பெயரை மக்கள் யாரும் வைக்க கூடாது' - வடகொரியாவில் புது விதி!

    ‘இனிமேல் இந்த பெயரை மக்கள் யாரும் வைக்க கூடாது’ – வடகொரியாவில் புது விதி!

    வடகொரியாவில் அதிபர் கிம்மின் மகள் பெயரை அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    வடகொரியாவில் நடப்பவை பெரும்பாலும் அதிர்வுகளை கிளப்புவதாகவே உள்ளது. அங்கு போடப்படும் உத்தரவுகளும், சொல்லப்படும் அறிவுரைகளும் பெரும்பாலும் விசித்திரமானதாகவே இருக்கின்றன. அதேநேரம், அந்நாட்டில் தண்டனைகளும், கட்டுப்பாடுகளும் அதிகமாக விதிக்கப்படுகின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செயல்களும் அனைவரையும் மிரள வைப்பதாகவே உள்ளது. 

    இந்நிலையில், வடகொரியா தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை அந்நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

    மேலும், வடகொரியா அதிபர் கிம்மின் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அதிபர் கிம்மின் மகள் பெயர் கிம் ஜு ஏ. எனவே இப்பெயருள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களின் பெயரை ஒருவாரத்திற்குள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

    இந்திய அணியில் இல்லாதது குறித்து மனம் திறந்த ஷிகர் தவான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....