Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்போலி கணக்குகள்..'ப்ளூ டிக்' கட்டணம்...மீண்டும் வேலைக்கு வர அழைப்பு: அதிரடி காட்டும் எலான் மஸ்க்!

    போலி கணக்குகள்..’ப்ளூ டிக்’ கட்டணம்…மீண்டும் வேலைக்கு வர அழைப்பு: அதிரடி காட்டும் எலான் மஸ்க்!

    ட்விட்டரில் இனி எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி போலி கணக்குகள் நீக்கப்படுமென எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

    எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். 

    இதுமட்டுமல்லாது, இனி ட்விட்டரில் பல்வேறு மாறுபாடுகள் நிகழும் என தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில், ப்ளு டிக், ஊழியர்கள் நீக்கம் என எலான் மஸ்க்கின் அதிரடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள், ப்ளு டிக், ஊழியர்கள் நீக்கம், நீண்ட பதிவு போன்ற சில அதிரடிகளை தற்போது எலான் மஸ்க் அரங்கேற்றியுள்ளார். 

    போலி கணக்குகள்

    ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் எந்தவித எச்சரிக்கையும் இன்றி நீக்கப்படும் என அறிவித்துள்ளார். ‘ முன்னேறி செல்கையில் போலி கணக்கு என்று தெளிவாக குறிப்பிடாமல், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் பயனாளர்களின் ட்விட்டர் கணக்குகள் எந்த வித எச்சரிக்கையுமின்றி நீக்கப்படுமென தெரிவித்துள்ளார். 

    மேலும், கடந்த முறை கணக்கு நீக்கப்படுவதற்கு முன்பாக எச்சரிக்கை அளித்துவந்தோம். ஆனால், தற்போது நாங்கள் அடையாள சரிபார்ப்பு நடைமுறயை விரிவுபடுத்திவிட்டதால் எச்சரிக்கைகள் எதுவும் அளிக்கப்படாது. இது ட்விட்டரின் ‘ட்விட்டர் புளூடிக்’ வசதியை பெறுவதற்கான தெளிவான நிபந்தனையாகும்’ எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: முதல்வரும் ஆளுநரும் ‘ஈகோ’ இல்லாமல் இணைந்து செயல்படணும் – அன்புமணி வலியுறுத்தல்

    ப்ளு டிக்

    ட்விட்டர் ப்ளு டிக்கிற்கு 8 அமெரிக்க டாலர்கள் (ரூ.660) மாதாந்திரம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மாதாந்திர கட்டண முறை இந்தியாவில் இந்த மாதத்திலிருந்து அறிமுகமாகும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

    ஊழியர்கள் நீக்கம்

    ட்விட்டரில் பணிபுரிந்த 7400 ஊழியர்களில் 3700 ஊழியர்களை கடந்த 4-ம் தேதி எலான் மஸ்க் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலரை மீண்டும் பணிக்கு வரும்படி ட்விட்டர் நிறுவனம் மெயில் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த மெயிலில், தவறுதலாக பணி நீக்கம் செய்துவிட்டோம், ஆதலால் நீங்கள் மீண்டும் பணிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    நீண்ட பதிவு 

    ட்விட்டரை பொறுத்தவரையில், ஒரு ட்விட்டில் அதிகபட்சமாக 280 எழுத்துகள் மட்டுமே இடம் பெறமுடியும். இந்நிலையில், இந்த விதிமுறையை மாற்றி ட்விட்டரில் இனி நீண்ட பதிவை ட்விட் செய்யலாம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தபடும் என தெரிகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....