Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஓபிஎஸ்க்கு ஆதரவாக யாருமே இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    ஓபிஎஸ்க்கு ஆதரவாக யாருமே இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக யாருமே இல்லை என்றும், அவர் திமுகவின் பீ டீமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருக்கிறார். மேலும் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும், கட்சியின் சின்னத்தை முடக்க தான் காரணமாக இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கருத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். யார் நினைத்தாலும் சின்னத்தை முடக்க முடியாது என்றும், ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து கேலிக்கூத்தாக இருப்பதாகவும் கூறினார். 

    மேலும், இடைக்கால பொதுச்செயலாளர் தான் கட்சியை வழிநடத்தி வருவதாகவும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை என்றும், அவர் திமுகவின் பீ டீமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர் செல்வம் நினைப்பது எதுவும் நடக்காது என்றும், மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் தங்களுக்கு தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    விரக்தியின் உச்சத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருவதாகவும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்திடம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஓபிஎஸ் உடன் ஒரு கட்சியும் கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

    மேலும் அவர், யார் நினைத்தாலும் அதிமுக சின்னத்தை முடக்க முடியாது என்றும், அவரின் மனதில் இருப்பது தான் வெளிவந்து இருப்பதாகவும், அவர் சின்னத்தை முடக்கும் வேலைகளில் தான் ஈடுபட்டு கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    மருமகனால் காத்திருப்பு; டென்ஷனான புதுச்சேரி முதலமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....