Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பனிபொழிவால் உறைந்த அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி

    பனிபொழிவால் உறைந்த அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி

    கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி உறைந்த நிலையில் காணப்படுகிறது.  

    சென்னை குளிருக்கே நம்மால் தாங்க முடியவில்லை. ஊட்டியும் காஷ்மீரும் போட்டியில் மிஞ்சுகையில், பனிபொழியும் நாடுகளில் குளிர் எப்படி இருக்கும்? சும்மா ஜில்லுனு இருக்கும் என்று சொல்லும் வார்த்தை கூட ஒப்பாகாது என்பது தான் நிஜம். ஆம், தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. 

    அமெரிக்க நாட்டில் கடந்த சில நாட்களாகவே அதீத பனிமழை பொழிந்து வருகிறது. இங்கு வெப்பநிலை பூஜ்ஜியம் அளவிற்கு சென்றுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக, வீடுகளும் கட்டிடங்களும் வாகனங்களும் உறைந்த நிலைக்கு சென்றுள்ளன. அதேபோல் கடும் பனிப்பொழிவு காரணமாக மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. 

    அதே சமயம், கடும் பனிப்பொழிவால் விமானப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பனிப்பொழிவு காரணமாக பலர் வாகனங்களில் சிக்கி உயிரிழந்த காட்சிகளும்  வெளியாகி இருக்கின்றன. 

    இதனிடையே, வட அமெரிக்காவில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒருபகுதி முழுவதும் உறைந்த நிலைக்கு சென்றுள்ளது. சில பகுதிகளில் மட்டும் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 

    ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்; பொங்கல் தொகுப்பு வழங்குவதில் சிக்கல்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....