Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசீனாவில் இருந்து கோவை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

    சீனாவில் இருந்து கோவை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

    சீனாவில் இருந்து கோவை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பி.எப் 7 வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. 

    இந்நிலையில் தில்லி விமான நிலையத்தில் கடந்த வாரம் 4 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சர்வதேச விமானப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம் நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

    இதனிடையே, சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்த ஒருவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அவரின் மாதிரி மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    முன்னதாக, நேற்று முன்தினம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய்க்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆன்லைன் சூதாட்ட அவசரத் சட்டத்தின் அவசரத் தன்மையை ஆளுநர் உணர வலியுறுத்தும் பாமக நிறுவனர் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....