Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் - வதந்தியா? உண்மையா?

    ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் – வதந்தியா? உண்மையா?

    தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தவறாக வந்த செய்திக்கு போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

    கடந்த சில வாரங்களாக ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. பலர் இது சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்தனர். 

    இந்நிலையில், இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என தெரிவித்துக் கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும், இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘ஃபீனிக்ஸ் பறவைக்கு இணையானவர் குஷ்பூ’ – அண்ணாமலை வியப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....