Friday, March 31, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஜோடி சேரும் அவெஞ்சர்ஸ், மீண்டும் வரும் ஸ்பை கிட்ஸ், ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன் ரிலீஸ்...

    ஜோடி சேரும் அவெஞ்சர்ஸ், மீண்டும் வரும் ஸ்பை கிட்ஸ், ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன் ரிலீஸ் – ஒரே இடத்தில் பல தகவல்கள்!

    ப்ராஜெக்ட் ஆர்ட்டெமிஸ்..

    புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும், கேப்டன் அமெரிக்காவாக பலரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள கிறிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் அவர்களுடன் இணைந்து தி கிரே மேன் எனும் திரைப்படத்தில் தற்போது நடித்துவருகிறார்.

    இத்திரைப்படத்தில்தான் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் தனுஷ் அவர்கள் நடித்துள்ளார். தி கிரே மேன் திரைப்படத்தின் படப்படிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது  கிறிஸ் எவன்ஸ் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தினைப் பற்றிய செய்திகள் வந்துள்ளது.

    ஆம்! ஆப்பிள் ஓடிடி நிறுவனம் தயாரிக்க உள்ள இத்திரைப்படத்தில் கிறிஸ் எவன்ஸ் உடன் ப்ளாக் விடோவாக நடித்து நம்மை கவர்ந்த ஸ்கார்லெட் ஜோஹான்சன் அவர்கள் நடிக்கிறார். இதன் மூலம் அவெஞ்சர்ஸில் நடித்த இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர். 

    மேலும், இத்திரைப்படத்தை நடிகரும் ஓசார்க் எனும் புகழ்பெற்ற சீரிஸை இயக்கிய இயக்குநருமான ஜேசன் பேட்மென் இயக்கவிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ப்ராஜெக்ட் ஆர்ட்டெமிஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

    மீண்டும் வருகிறதா ஸ்பை கிட்ஸ் ?

    பலருக்கும் விருப்ப திரைப்படமாக இருந்த ஸ்பை கிட்ஸ் மீண்டும் புதிய பரிணாமத்துடன் ஆரம்பிக்கவிருக்கிறது. சுட்டி உளவாளிகள் என்றழைக்கபட்ட ஸ்பை கிட்ஸ் திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரும் ரசிக பட்டாளமே உள்ளது என்றால் அது மிகையாகாது. 

    இரண்டாயிரங்களில் வெளிவந்த ஸ்பை கிட்ஸ் திரைப்படத்தின் அத்தனை பாகங்களுக்கும் இங்கே ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பிரபல நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஸ்பை கிட்ஸ் என்பதை அடிப்படையாகக் கொண்டு புதிய திரைப்படத்தை உருவாக்க இருக்கிறது. 

    இதன்படி, ராபர்ட் ரோட்ரிகஸ் இத்திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. 

    ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன் 

    உலகின் மூலை முடுக்குகள் வரை சென்றடைந்து பல பார்வையாளர்களை தன் வசப்படுத்திய சீரிஸ்தான், கேம் ஆஃப் த்ரோன்ஸ். தற்போதும் பலர் பார்க்கும் சீரிஸாகத்தான் இருக்கிறது, கேம் ஆஃப் த்ரோன்ஸ். பல காதாப்பாத்திரங்கள், பிரம்மாண்ட பொருட்செலவுகள், கதையின் ஆழம் என அனைத்தும் இந்த சீரிஸை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது. 

    கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸில் பலரையும் ஆச்சரியப்படுத்தியவைகளில் மிக முக்கியமானவை கதையில் வரும் ட்ராகன்ஸ்தான். இந்நிலையில் இந்த ட்ராகன்களை அடிப்படையாகக் கொண்டு சீரிஸ் ஒன்று உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படியே, ஹவுஸ் ஆஃப் ட்ராகன் என்ற பெயரில் சீரிஸ் உருவாகிவருகிறது.

    கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸூக்கு பலத்த வரவேற்பு இருக்கும் நிலையில், ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன் சீரிஸானது வருகிற ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி எச்பிஓ மேக்ஸில் ( HBO MAX) வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

    இதையும் படிங்க; அறிவியல் திரைப்படம்தான் ஆனால் இதமாக உருகச்செய்கிறது கதை – ‘தி ஆடம் ப்ராஜக்ட்’ திரைப்பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    kalashtra sexual harassment issue

    நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்; பாலியல் தொல்லை காரணமாக கலாஷேத்ரா மாணவர்கள் திட்டவட்டம்!

    சென்னை கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.  சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் சிலர் காணொளி வெளியிட்டு புகார்களை...