Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுமண தம்பதிகள் வெட்டிக் கொலை: கும்பகோணத்தில் பரபரப்பு!

    புதுமண தம்பதிகள் வெட்டிக் கொலை: கும்பகோணத்தில் பரபரப்பு!

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருமணம் நடந்த ஐந்து நாளில், புதுமணத் தம்பதி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள துளுக்கவெளிப் பகுதியை சேர்ந்த, 24 வயது நிரம்பிய இளம்பெண் சரண்யாவும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நிரம்பிய மோகனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் இரு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சரண்யாவின் காதல் விவகாரம், அவருடைய குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. சரண்யாவின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சரண்யாவின் சகோதரர் சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு சரண்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்தார்.
    வீட்டில் நடக்கும் திருமண ஏற்பாடுகளை அறிந்து கொண்ட சரண்யா, கடந்த 5 நாட்களுக்கு முன்பாக, வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு ஓடி வந்த சரண்யா, மோகனுடன் திருமணம் செய்துகொண்டு, இருவரும் சென்னையில் தங்கினர். இதனை அறிந்த சரண்யாவின் குடும்பத்தினர் மிகவும் வேதனையடைந்தனர்.
    இந்நிலையில், புதுமணத் தம்பதிகளை விருந்துக்கு வருமாறு, சரண்யாவின் சகோதரர் சக்திவேல் அழைத்துள்ளார். சகோதரர் சக்திவேலை நம்பி, சரண்யா மற்றும் மோகன் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அந்த சமயம், புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் வருவதற்கு முன்பாக, இருவருக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீரை கையில் வாங்கி புதுமணத் தம்பதிகள் குடித்த போது, அவருடைய சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் புதுமணத் தம்பதிகளை கத்தியால் வெட்டினர்.
    இதில் படுகாயம் அடைந்த புதுமணத் தம்பதிகள் இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து, தகவல் அறிந்த சோழப்புரம் காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரின் கொலை தொடர்பாக, காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சரண்யாவின் சகோதர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் கும்பகோணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....