Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழக ஆளுநரை பதவியிலிருந்து உடனடியாக நீக்க, குடியரசுத் தலைவருக்கு வைகோ வலியுறுத்தல்

    தமிழக ஆளுநரை பதவியிலிருந்து உடனடியாக நீக்க, குடியரசுத் தலைவருக்கு வைகோ வலியுறுத்தல்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை வைகோ வலியுறுத்தல்.

    ‘சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரை நிகழ்த்திய தமிழக ஆளுநர்,

    “ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். சனாதன தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம், செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது. சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து காந்தகார், பெஷாவர் போன்ற நகரை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால், அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதன. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமை’ என்று பேசியுள்ளார்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி, ஒரு மதத்தின் கொள்கையை பறைசாற்றும் விதமாக சனாதன தர்மம் தான் இந்தியாவை வழி நடத்துகிறது என்று பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மனிதர்களாய் பிறந்த அனைவரும் சமம் என்ற சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களின் கோட்பாட்டை உயர்த்தி பேசியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தான் யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியாவை வழி நடத்துவது அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டமே தவிர, வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல என வைகோ தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆளுநர் ரவி தான் வகிக்கும் பதவியின் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பிறவி பேதத்தை கற்பிக்கும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசிய ஆளுநர் அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். உடனடியாக குடியரசு தலைவர் தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

    காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்! சிபிசிஐடி விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....