Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நியூசிலாந்தில் அதிபயங்கர நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

    நியூசிலாந்தில் அதிபயங்கர நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

    நியூசிலாந்தில் இன்று 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நியூசிலாந்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தில் வெலிங்கடன் பகுதிக்கு உட்பட்ட லோயர் ஹட் நகரின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. 

    நியூசிலாந்தின் பராபரமுவிலிருந்து வடமேற்கே 50 கிமீ தொலைவில், 48 கிமீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுமார் 30 நொடிகள் நீடித்ததாகவும், 60,000-த்திற்கும் மேற்பட்டோர் இந்நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுவரையில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. மேலும், அதிக நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில், 41,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். மீட்பு பணிகளும் இன்னும் முடிவடையாத சூழல் அங்கு நிலவி வருகிறது.

    ‘வாத்தி’ எங்களை இழிவுபடுத்துகிறது; தனுஷ் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....