Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநிதி ஆயோக் அமைப்புக்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்

    நிதி ஆயோக் அமைப்புக்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்

    நிதி ஆயோக் அமைப்புக்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார்.

    இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு எனப் பல பிரிவில் முக்கியமான முடிவுகளையும் ஆய்வுகளையும் செய்யும் ஒன்றிய அரசின் அமைப்புதான் நிதி ஆயோக். 

    இந்த நிதி ஆயோக் அமைப்புக்கு தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) பரமேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வாய்ப்பை தனக்கு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

    இந்திய நிர்வாகப் பணியில் 17 ஆண்டுகாலம் பணியாற்றிய பரமேஸ்வரன் 2009-ம் ஆண்டு தனது பதவியை ராஜிநாமா செய்தார்.  அதன் பின்னர் 2016 இல் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் (D0DWS) செயலாளராக மீண்டும் பணியில் சேர்ந்தார். நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பரமேஸ்வரன் காஷ்மீரைச் சேர்ந்தவர். 

    குப்பை இல்லாத இந்தியா, திறந்தவெளி கழிவறையை ஒழித்தல், நகரங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகள் தொடர்பானே திட்டமே ஸ்வச் பாரத். 

    இத்திட்டத்தில் திறந்தவெளி கழிவறையை ஒழிப்பதுக்கான பிரசாரத் திட்டம் ஸ்வச் பாரத் அபியான் என்ற பெயரில் பரமேஸ்வரன் தலைமையில் தான் நடந்தது. 

    63 வயதாகும் பரமேஸ்வரன் ஏப்ரல் 1998 முதல் பிப்ரவரி 2006 வரை ஐக்கிய நாடுகள் சபையில் மூத்த கிராமப்புற நீர் துப்புரவு நிபுணராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

    மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் மறுத்த விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....