Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதூக்கம் வருகிறதென கூறிய டிரைவருக்கு பாராட்டு மழை; இணையத்தில் நிகழ்ந்த சம்பவம்!

    தூக்கம் வருகிறதென கூறிய டிரைவருக்கு பாராட்டு மழை; இணையத்தில் நிகழ்ந்த சம்பவம்!

    ரைடை கேன்சல் செய்வதற்காக ஆன்லைன் வாகன ஓட்டுநர் ஒருவர் கூறிய நேர்மையான காரணம் இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    தற்போது இயங்கி வரும் நவீன உலகில் விரைவான பயணத்திற்காக ஆன்லைன் செயலிகள் வாயிலாக வாடகை கார்கள், ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் போன்றவற்றை புக் செய்வதை பலரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

    இந்த ஆன்லைன் செயலிகள் மூலம் வாடிக்கையாளர் வாகனம் எங்கு வருகிறது என்பதை தெரிந்துகொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. வாகனங்களை புக் செய்யும் வாடிக்கையாளர் வாகனத்தை இயக்கி வரும் ஓட்டுனரிடம் போன் கால் செய்வது பேசுவது மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 

    இதன் மூலம், பலரும் தங்களது ரைடை கேன்சல் செய்ய பல காரணங்களை கூறுவது உண்டு. நேரம் அதிகம் எடுக்கிறது; பேருந்து வந்துவிட்டது; செல்லும் வழி மாறிவிட்டது உள்ளிட்ட காரணங்கள் பொதுவாக கூறப்படுகின்றன. அதே சமயம், ஓட்டுநர் ரைடை கேன்சல் செய்ய பல காரணங்கள் கூறப்படுகிறது.  

    அந்த வகையில் ஓட்டுநர் ஒருவர் தனது ரைடை கேன்சல் செய்ய ஏற்றுக்கொள்ள தக்க ஒரு காரணத்தை குறுஞ்செய்தி வாயிலாக கூறியுள்ளார். 

    பெங்களூருவைச் சேர்ந்த ஆஷி என்ற ட்விட்டர் கணக்கில் இருப்பவர், ஊபரில் வாகனம் ஒன்றை புக் செய்துள்ளார். இதனை பரத் என்ற ஓட்டுநர் ஏற்றுக்கொண்டார். பிறகு சிறிது நேரம் கழித்து ஓட்டுநர் வரவில்லை. பிறகு இவர், சாட் பாக்ஸ் மூலமாக தனக்கு தூக்க கலக்கமாக இருப்பதாகவும், ரைடை கேன்சல் செய்யுமாறும் ஆஷியிடம் கேட்டுக்கொள்ளார். இதற்கு ஆஷி எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஓகே என பதில் அளித்துள்ளார். 

    இதனை ஸ்கீரீன்ஷாட் எடுத்த ஆஷி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு பாராட்டுகள் பல குவிந்து வருகின்றன. 

    இந்தியாவின் பழமையான மொழி தமிழ்- ஆளுநர் ஆர்.என்.ரவி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....