Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநீட் தேர்வு கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும்!

    நீட் தேர்வு கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும்!

    ஜூலை மாதம் நடக்க இருக்கும் நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது தேசிய தேர்வு முகமை. 

    பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளங்கலை படிப்பிற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்த நீட் தேர்வு இந்தியாவின் 543 நகரங்களில் நடைபெறுகிறது. மேலும் வெளிநாடுகளில் 14 இடங்களில் நடைபெறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 13 மொழிகளில் இந்த தேர்வானது நடைபெறுகிறது. 

    மேலும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி வரை இணையத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்கும் போது ஏதேனும் பிழை ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்துகொள்ள 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான கட்டணத்தை தேசிய தேர்வு முகமை உயர்த்தியுள்ளது. 

    • பொதுபிரிவினருக்கு 1500 ரூபாயிலிருந்து 1600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 
    • பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1400 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 
    • மாற்றுத்திறனாளிகள், பட்டிலினத்தவர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 800 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
    • வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் அனைத்து பிரிவினருக்கும் 8500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இவை அனைத்தும் நீட் எழுதும் தேர்வுக்கான கட்டணம் மட்டும் தான். இதைத் தவிர்த்து இணைய சேவைக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட கட்டணங்களைத் தனியாக செலுத்திட வேண்டும். இதனால் எத்துனை பேர் விண்ணப்பிப்பார்கள் என்று தெரியவில்லை. 

    கடந்த ஆண்டு 16 லட்சத்தி 14 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை கட்டணத்தை உயர்த்தி இருப்பதால் இந்தாண்டு விண்ணப்பங்கள் குறைவாக வரும் என்றே தெரிகிறது.

    மேலும் இந்த அறிவிப்பு ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை குறைக்கும் என கருத்தாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய தேர்வு முகமையின் இந்த அறிவிப்பை பார்த்து மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....