Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசோபிக்கத் தவறிய வார்னர், சோகத்தில் முடிந்த டெல்லி அணி!

    சோபிக்கத் தவறிய வார்னர், சோகத்தில் முடிந்த டெல்லி அணி!

    15 ஆவது ஐபிஎல் தொடரில் 15 ஆவது போட்டியாக நவி மும்பையில் உள்ள டி.ஓய். பாட்டில் மைதானத்தில், லக்னோ அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. 

    இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் டெல்லி அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னரும் பிரித்வி ஷாவும் களம் இறங்கினர். இந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக களமிறங்கும் வார்னரின் மீது அநேக எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. 

    முதல் இன்னிங்ஸ்

    பிரித்வி ஷா முதல் ஓவரிலேயே பந்தை இரு முறை பவண்டரிக்கு விரட்டினார். அதன்பின் அவ்வபோது பவுண்டரிகள் அடித்தவாறே இருந்தார், பிரித்வி ஷா. பவர்பிளேவில் திறமைசாலியாக பார்க்கப்படும் வார்னருக்கு, பவர்பிளேவில் அதிக பந்துகள் கிடைக்கவில்லை. கிடைத்த பந்துகளிலும் வார்னர் சோபிக்கவில்லை. 

    அதிரடியாக விளையடிய பிரித்வி ஷா 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அதன்பிறகும் பவுண்டரிகளை விளாசிய பிரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில் கௌதம் பந்துவீச்சில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். மறுபுறம் விளையாடிய வார்னரும் 12 பந்துகளுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். வார்னரின் இந்த இன்னிங்ஸ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    வார்னருக்கு பிறகு களமிறங்கிய ரோவ்மேன் பாவெல்லும் விரைவில் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டியதால், டெல்லி அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு பின் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும், சர்ஃப்ராஸ் கானும் இணைந்து மிகவும் நிதானமாய் ஆடினர். இருவரும் அதிரடியாக ஆட ஒரு சில முன்னெடுப்புகளை நிகழ்த்தினாலும், அவற்றை லக்னோ அணியின் பந்துவீச்சு தடுத்தது.

    இருபது ஓவர் முடிவில் டெல்லி அணியானது, 3 விக்கெட் இழப்பிற்கு வெறுமனே 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    இரண்டாம் இன்னிங்ஸ் 

    150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன், லக்னோ அணியானது களம் கண்டது. வழக்கம்போல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலும், குவின்ட்ன டி காக் அவர்களும் தொடக்க ஜோடியாக களமிறங்கினர். 

    நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 24 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதற்குப் பின் ஆட்டக்களத்திற்கு வந்த எவின் லூயிஸ் 11 பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் நிதானமும் வேகமும் ஒன்றாய் சேர்ந்ததுப்போல் விளையாடிய குவின்டன் டி காக் பவுண்டரியின் மூலம் தனது அரைசதத்தை எட்டியவர் அதன்பின்பும் லக்னோ அணியின் ஸ்கோரை உயற்றினார். 

    80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குவின்டன் டி காக் குல்தீப் யாதவ் பந்துவீச்சில், சர்ஃப்ராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டக்களத்தை விட்டு வெளியேறினார். 4 ஓவர்களுக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்திற்கு வந்த குருனால் பாண்டியா ஒரு சிக்சர் விளாசினார். 

    மேலும், இறுதி ஓவரில் களத்தில் இருந்த தீபக் ஹூடா தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால் இறுதி ஓவரில் படபடப்பு எட்டியது. போட்டியானது லக்னோ அணியின் பக்கமே இருந்தாலும், டெல்லி அணிக்கும் சிறிது வாய்ப்பு இருந்தது. 

    ஆனால் அந்த வாயப்பை ஆயுஷ் படோனி சிதறடித்தார். தாகூர் வீசிய பந்தில் படோனி பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி லக்னோ அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணியானது 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

    டெல்லி அணியின் தோல்வி சோகமோ தொடர்கிறது…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....