Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திருப்பதியில் நயன்தாரா செருப்பு அணிந்த விவகாரம்...தேவஸ்தானம் விசாரணை

    திருப்பதியில் நயன்தாரா செருப்பு அணிந்த விவகாரம்…தேவஸ்தானம் விசாரணை

    திருப்பதியில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் (09-06-2022)  காலை நடந்தது. திருமணத்தில், முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் உள்பட உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து, மணமக்கள் இருவரும் இன்று காலை குடும்பத்தினருடன் திருப்பதி சென்றனர். அங்கு ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின் கோயிலுக்கு வெளியே வந்து அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோசூட் நடத்தினர். தற்போது இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

    மேலும் கோவில் வளாகத்தில் யாரும் செருப்பணிந்து செல்லக்கூடாது என்பது திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டளை. இது ஆண்டாண்டுகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவில் வளாகத்தில் செருப்பு கால்களுடன் சென்றார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் செருப்புகளை கழட்டி விட்டுவிட்டு வெறும் கால்களுடன் கோவிலுக்குள் சென்ற நிலையில், வெறும் கால்களுடன் செல்ல நயன்தாரா மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து செருப்பு கால்களுடன் அவர் நடந்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இது குறித்து தேவஸ்தான நிர்வாகத்துக்கு தெரியவர, நிர்வாக குழுவினர் இது குறித்து விவாதித்துள்ளனர். விவாதத்தின் முடிவில், நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அறங்காவலர் குழுத் தலைவருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.

    இது குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பால்ரெட்டி கூறுகையில், ஏழுமலையான் கோயில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர், கோயில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பெரிய அளவில் போட்டோஷூட் நடத்த தேவஸ்தானத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் இதற்கு முன் இதுபோல் யாரும் ஏழுமலையான் கோயில் முன் போட்டோஷூட் நடத்தியது கிடையாது என்றும் தெரிவித்தார்.

    மேலும் அவர், இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கான காரணம் பற்றி அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

    திருமணம் முடிந்த மறுநாளே விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டத்தை தடைச் செய்ய அவசர சட்டம் தேவை: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....