Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்எத்தனால் கலந்த பெட்ரோல் என்றால் என்ன, அது வாகனங்களுக்கு பயனுள்ளதா அல்லது தீங்கு விளைவிக்குமா

    எத்தனால் கலந்த பெட்ரோல் என்றால் என்ன, அது வாகனங்களுக்கு பயனுள்ளதா அல்லது தீங்கு விளைவிக்குமா

    தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. இது எரிபொருளிலிருந்து முழுமையான பலனை பெற உதவுகிறது, வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயு உமிழ்வை குறைக்கிறது மற்றும் சுற்றுச்சூழலுக்கு சிறந்தது.

    இந்தியாவிலும் சர்வதேச சந்தையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், படிம எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும், விரைவில் எத்தனால் கொண்ட எரிபொருள் வாகனங்கள் நாட்டில் இயங்கத் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் 5 முதல் 10% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.

    எத்தனால் எரிபொருள் என்பது எத்தில் ஆல்கஹால் ஆகும். அதே வகையான ஆல்கஹால் மதுபானங்கள் தயாரிக்கவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் மோட்டார் எரிபொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக பெட்ரோலுக்கான உயிரி எரிபொருள் சேர்க்கையாக இது பயன்படுகிறது.

    மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்களன்று, நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் பம்புகளில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் ஏப்ரல் 2023 க்குள் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    முன்னதாக, நவம்பர் 2022 காலக்கெடுவிற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே இந்தியா 10% எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டிற்கு வழங்குதல் என்ற இலக்கை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

    எத்தனால் என்றால் என்ன?

    எத்தனால் ஒரு கரிம கலவை, இதனை எத்தில் ஆல்கஹால் என்றும் கூறுவர். இது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளாகும். இது மதுபானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. எத்தனாலில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. எனவே வாகனங்களின் எரிபொருளுக்கு எத்தனாலை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றாலும், இதற்காக எஞ்சின் மற்றும் வாகனங்களின் சில பாகங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஆனால் தற்போதுள்ள பெட்ரோலில் கலந்து திறம்பட பயன்படுத்தலாம். எத்தனால் கலந்த பெட்ரோல் ஏற்கனவே நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது. இந்த எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பது எண்ணெயினை சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் செய்யப்படுகிறது. இது ஒன்றும் புதிதல்ல. உலகம் முழுவதும் எத்தனால் கரிம எரிபொருளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. அது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது. எத்தனாலில் ஆக்ஸிஜன் இருப்பதால், எரிபொருளை முழுமையாக எரிக்க உதவுகிறது. இதன் விளைவாக குறைந்த கரியமில வாயு உமிழ்வு ஏற்படுகிறது.

    வாகனத்தை பாதிக்குமா?

    தற்போதுள்ள வாகனத்தில் பெட்ரோலுடன் எத்தனால் சேர்ப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. எத்தனாலில் ஆக்ஸிஜன் இருப்பதால், எரிபொருளை முழுமையாக எரிக்க உதவுகிறது, கரியமில வாயு உமிழ்வினைக் குறைக்கிறது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிபொருளாக பெட்ரோலை மாற்றுகிறது. ஆனால் அதன் செயல்திறனில் சில மாற்றங்கள் உள்ளன. இந்தியாவில் எத்தனால் முதன்மையாக கரும்பிலிருந்து நொதித்தல் செயல்முறை மூலம் பெறப்படுகிறது. இது வெவ்வேறு அளவுகளில் எரிபொருளுடன் கலக்கப்பட்டு, வாகனங்களில் இருந்து கரியமில வாயு உமிழ்வைக் குறைக்க உதவும். மேலும், இது தாவரங்களின் அடிப்படையிலானது என்பதால், இது புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகக் கருதப்படுகிறது.

    உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தியா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....