Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநவராத்திரி ஸ்பெஷல்.. புதிய மெனுவை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே!

    நவராத்திரி ஸ்பெஷல்.. புதிய மெனுவை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே!

    நவராத்திரி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு ரயில் பயணிகளுக்காக இந்திய ரயில்வே சிறப்பு உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

    ஒன்பது நாட்கள், ஒன்பது விதமான படைப்புகளை அம்மனுக்கு வைத்து இந்து மதத்தினரால் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை தற்போது உலகம் முழுவதும் கலைக்கட்டத் துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நவராத்திரியின் போது ரயில்களில் பயணிக்கும் பக்தர்களுக்காவே இந்திய ரயில்வே சிறப்பு உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

    செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு உணவு வகைகள் அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    நவராத்திரிக்கான சிறப்பு உணவுகளை https://www.ecatering.irctc.co.in/ இணையதளம் வாயிலாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

    நவராத்திரி உணவு வகைகளில் என்னென்ன சிறப்பு உணவுகள் இடம்பெற்றுள்ளன?

    பராத்தா, ஆளு சாப், ஜவ்வரிசி டிக்கி, கிச்சடி, பன்னீர் மக்மாலி போன்ற உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. 

    இதுமட்டுமின்றி, கோப்தா கறி, ஜவ்வரிசி கிச்ரி, நவராத்திரி தாலி போன்றவையும் சிறப்பு உணவுகளாக இடம்பெற்றுள்ளன. 

    சிறப்பு உணவுகளின் விலை 99 ரூபாய் முதல் தொடங்குகிறது. எந்த உணவுகளை ஆர்டர் செய்கிறோமோ அதற்கு ஏற்ப விலை மாறுபடுகிறது. IRCTC நிறுவனத்தின் இ-கேட்டரிங் வசதி உள்ள ரயில்களில் மட்டுமே இந்த நவராத்திரி சிறப்பு உணவுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ செயல்பாடுகள் 5 ஆண்டுகளுக்கு முடக்கம் – மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....