Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'ஃப்ரீ ஃபயர் கேம்' பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்.....நீதிபதிகள் தெரிவித்த கருத்து!

    ‘ஃப்ரீ ஃபயர் கேம்’ பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்…..நீதிபதிகள் தெரிவித்த கருத்து!

    தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    தென்மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு பெண் தனது மகளை என்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். 

    அந்த ஆட்கொணர்வு மனுவில் அந்த தாய் தெரிவித்துள்ளதாவது:

    கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்த எனது மகள் மாயமானார். இதைத்தொடர்ந்து, உறவினர் வீடுகளில் தேடினோம். கண்டுபிடிக்க முடியவில்லை. 

    காவல்துறையில் மகளைக் காணவில்லை என புகார் செய்தோம். மகளை தேட நடவடிக்கை எடுக்கவில்லை. மொபைல் போனில் இணையதள, ‘ஃப்ரீ பயர் கேம்’ களை விளையாடும் பழக்கம் மகளுக்கு இருந்தது.

    இதில் ஒரு ஆணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் தவறான பழக்க வழக்கத்திற்கு அடிமையானவர். எனது மகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளார். காவல்துறை விசாரணையில் முன்னேற்றம் இல்லை. எனவே, மகளை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இதையும் படிங்க: ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ செயல்பாடுகள் 5 ஆண்டுகளுக்கு முடக்கம் – மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது. மனுதாரர் மகளும் ஆஜரானார்.  விசராணை முடிந்தப் பின்பு, மனுதாரரின் மகள், ‘ தாயுடன் செல்ல விரும்புகிறேன். தடுத்து வைத்திருந்த நபருடன் எதிர்காலத்தில் தொடர்பு கொள்ளமாட்டேன். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவேன்’ என்றார். 

    இதைத்தொடர்ந்து, மாணவியை தடுத்து வைத்திருந்த நபருடன் எதிர்காலத்தில் மாணவிக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்றும், அவர் மாணவியிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதை காவல்துறை பறிமுதல் செய்து அந்நபரிடம் விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவிட்டனர். 

    மேலும், ஆன்லைன் கேம் பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....